June 14, 2016
தண்டோரா குழு
குழந்தைகள் அணியும் சீருடை மூலம் அவர்கள் ஆணா பெண்ணா என்று பிரித்தறியும் முறையை நீக்கி இரு பாலர்களுக்கும் ஒரே வித சீருடையை பிர்மின்காமில் உள்ள ஆலென் கிராஃவ்ட் பள்ளி முதல் முறையாக அமுல் படுத்தியுள்ளது.
ஆணும் பெண்ணும் அல்லாத குழந்தைகளை ட்ராஸ் ஜெண்டர் என்று அழைப்பர்.ஓரினச் சேர்க்கை யுடைய பெண்பாலரை லெஸிபியன் என்றும் ஆண்பாலர்களை 'கே' என்றும் அழைப்பர்.இரு பால் கூறுடையவர்களை பைசெக்ச்சுவல் என்றும், ஒட்டுமொத்தமாக இவர்களை LGBT என்றும் குறிப்பர்.
இத்தகைய குழந்தைகள் பாரம்பரியப் பள்ளிகளில் சீருடையின் வேறு பாட்டால் தனிமைப் படுத்தப் படுகின்றனர் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. இதை நிவர்த்திக்கும் முகமாக சமநிலைச் சீருடையை முதன் முதல் அமுல் படுத்தியது ஆலென் கிராஃவ்ட் பள்ளி.அதாவது சாம்பல் நிற சட்டை,கறுப்பு நிறக் கால் சட்டை மற்றும் வெளிர் நீல நிற உடை.இவற்றை இரு பாலர்களும் தங்களது வசதிக்கேற்ப
அணிந்து கொள்ளலாம்.இதன் மூலம் வித்தியாசமாகப் பிறந்த குழந்தைகளுக்கு எந்தச் சங்கடமும் ஏற்படாது.
இதே கொள்கையை கிங்க் ஹீத் பள்ளியும் அமுல்ப் படுத்தியுள்ளது.குழந்தைகளின் சௌகரியமும், மன விருப்பமுமே மிகவும் முக்கியம் என்று பள்ளி தெரிவித்துள்ளது.அதன் பிரதிபலிப்பாகவே அனைத்துக் குழந்தைகளும் காற்சட்டை,மேற் சட்டை , மற்றும் கீழ் பாவாடை போன்ற குறிப்பிட்ட உடைகளைக் குறிப்பிட்ட நிறத்தில் எந்த பாகுமாடுமின்றி அணிந்து கொள்ளலாம் என்று விதி முறையை மாற்றி அமைத்துள்ளது.
இதன் மூலம் அனைவருமே ஒரு போலவே தெரிவர். பத்திரிகைகளின் பதிவுப்படி 40 ஆரம்பப் பள்ளிகளுடன் சேர்த்து 80 பள்ளிகள் இந்தப் பாகுபாடற்ற நடுநிலைச் சீருடை விதியைப் பின்பற்றுகின்றன.
பிரிங்க்டென் காலேஜ் ம் இதை அங்கீகரித்துள்ளது. 16 வயதுக் குட்பட்ட அனைவரும் கால்சட்டை,மேல்சட்டை,கீழ் பாவாடை போன்ற எதை வேண்டுமானாலும் வசதி போல்,விருப்பம் போல், அணிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.மேலும் கம்பிளியிலான முழு கைச் சட்டை,கழுத்துப் பட்டை,காற்சட்டை,அல்லது குறுஞ்சட்டையும் திறந்த கழுத்து அங்கியும் அணியலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பள்ளித்தலைவர் ரிச்சர்ட் கைரஸ் கூறுகையில் மாணவ மாணவிகள் தங்களை எவ்விதம் பிரகடனப்படுத்திக் கொள்ள விரும்பினாலும் அதைப் பள்ளி வரவேற்கும்,இரு பாலர்களுக்கும் உள்ள வேறுபாட்டை நீக்குவதே பள்ளியின் குறிக்கோள் என்றார்.