• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேயை விரட்ட செருப்பில் இருந்த நீரை குடிக்கவைத்த 3 பேர் கைது

August 16, 2016 தண்டோரா குழு

ராஜஸ்தானில் உள்ள கோவில் ஒன்றில் பேயை விரட்டுவதாகக் கூறி, செருப்பில் நீரை ஊற்றிக் குடிக்க வைத்ததற்காக மூன்று பேரை காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்தியாவின் வட மேற்கு மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் பங்கயற்கண்ணி என்னும் கோயில் உள்ளது.இந்தக் கோயில் பேய்களை விரட்டுவதற்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

மேலும், பேய் பிடித்ததாக கருதப்படுபவர்கள்,பில்வாராவின் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் பேயை விரட்டுவதற்காக அந்தக் கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்நிலையில்,பேய் பிடித்தோரைக் குணமாக்குவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர் என்ற செய்தியை அறிந்த காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி பெண் ஒருவருக்குச் செருப்பில் தண்ணீர் அளிக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தி, கோயிலில் பேய் ஓட்டும் பணியில் உள்ள மூன்று நபரையும் கைது செய்தனர்.அதோடு, இனிமேல் அது போன்ற மூட நம்பிக்கைகளை அந்தக் கோயிலில் தொடராமல் இருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினரிடம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இது குறித்து போலீஸ் கண்காணிப்பாளர், பிரதீப் மோகன் கூறுகையில், அந்தக் கோவிலில் இது போன்ற சம்பவங்கள் அங்கு நிகழ்வதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது.மேலும்,இது போன்ற செயல்களை அங்கு நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வோம். அதையும் மீறிச் செய்பவர்களை தண்டிக்காமல் விடமாட்டோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க