• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வன்முறைக்கு காரணம் டோம் அண்ட் ஜெர்ரி.

May 11, 2016 தண்டோரா குழு

குழந்தைகளின் கவனத்தை மாற்ற பெற்றோர்கள் டாம் அண்ட் ஜெர்ரி கேலி சித்திரத்தை தொலைக்கட்சியில் போட்டு விட்டு தங்கள் வேலைகளை தொடருவர்.

வேறு சிலர் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது, சாப்பிட அடம்பிடித்தால் இந்த நிகழ்ச்சியை பார்க்கவைத்து அவர்களை சாப்பிட வைத்து விடுவர். குழந்தைகள் மட்டுமல்ல பெரியர்வர்களுக்கும் டாம் அண்ட் ஜெர்ரி என்றால் பிடிக்கும் தான்.

வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பேரா என்பவர்களால் 1940ல் இந்தக் கேலி சித்திரம் உருவாக்கப்பட்டது.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் இதை மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். இது டாம் என்னும் பூனைக்கும் ஜெர்ரி என்னும் எலிக்கும் இடையே தொடர்ந்து நடக்கும் போராட்டமும்,

ஒருவரை ஒருவர் தோற்கடிக்க அவர்கள் எடுக்கும் முயற்சியை வேடிக்கையாகக் காட்டும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.

ஜெரியை டாம் துரத்துவதும் பதிலுக்கு ஜெரி டாமை கிடைக்கின்ற ஆயுதங்கள் வைத்துத் தாக்குவதும் ஒரே போர்க்களமாக இருக்கும்.

இதைப் பார்ப்பதால் தான் மக்களின் மனதில் வன்முறை எண்ணங்கள் எழக்காரணம் என்று எகிப்து தகவல் சேவை மையம் தெரிவித்து உள்ளது.

வன்முறைகள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் அடுத்தவரை வெடிமருந்து பொருட்களை கொண்டு தாக்கினால் பரவாயில்லை என்னும் ஒரு தவறான கண்ணோட்டத்தை இது சித்தரிக்கிறது என்று எகிப்தின் மூத்த அதிகாரி சலாஹ் அப்டெல் சதக், கேரோ பல்கலைக்கழகத்தில் பேசும் போது இதைத் தெரிவித்தார்.

வன்முறையை ஊக்குவிக்கும் படியாக இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது என்று அந்த அதிகாரி உறுதியாக நம்புகிறார். மேலும், அவன் அடித்தால் நானும் அடிக்கலாம் மற்றும் வெடிமருந்து பொருள்களை பயன்படுத்தி அழிக்கலாம் என்னும் தவறான கருத்துகளை வேடிக்கையான முறையில் காட்டப்படுகிறது என்று கூறினார்.

வீடியோ கேம்ஸ் மூலம் வன்முறை பரவி வருவதாக அவர் குற்றம் சாட்டினர். அவை சீரழிவுக்கான விதையை இளைஞர்களின் மனதில் விதைக்கிறது. அவர்கள் வெகுநேரம் கொலை மற்றும் ரத்தம் சிந்துதல் போன்ற வீடியோ கேம்சை விளையாடுவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

கேரோ பல்கலைக்கழகத்தில் எகிப்த்தின் மூத்த அதிகாரி சலாஹ் அப்டெல் சதக் பேசியபோது தெரிவித்த இந்தக் கருத்துகள் அரபு நாடுகளில் ஏளனத்துடன் பேசப்பட்டடுகிறது.

மேலும் படிக்க