• Download mobile app
16 Sep 2024, MondayEdition - 3141
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கப் போகும் தாக்ஷாயனி யானை

July 27, 2016 தண்டோரா குழு

கேரளாவிலுள்ள 1,250 கோயில்கள் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ளன.

கோயில்களில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் யானைகளைப் பங்கெடுக்க வைப்பது இம்மாநிலத்தின் தனித்தன்மை.

இவ்வமைப்பு 33 யானைகளைப் பராமரித்து வருகிறது. புகழ் பெற்ற ஐயப்பன் திருக்கோயிலான சபரிமலையும் இவ்வமைப்பின் கட்டுப் பாட்டிலேயே இயங்குகிறது.

இங்குள்ள யானைகளில் வயதில் மூத்தது ‘தாக்ஷாயனி’ என்ற யானை. 86 வயதான இந்த யானை மூப்பின் எந்த அறிகுறிகளுமின்றி ஆரோக்கியமாகவும், திடமாகவும் உள்ளது. உலகிலேயே நீண்ட ஆயுளுடன் வாழும் யானை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று இவ்வமைப்பின் தலைவர் ப்ரயர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தேவஸ்வம், மற்றும் கேரள வனத்துறை ஆகியோரிடம் உள்ள ஆவணங்கள்படி இதுவரை வாழ்ந்த யானைகளில் தாக்ஷயினியே வயது முதிர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ்ஸில் பதிப்பதற்கு முன் தாக்ஷயினியைக் கௌரவிக்கும் முகமாக ஒரு தபால் கவர் வெளியிட கேரள தபால் சேவை மையம் தீர்மானித்துள்ளது என்றும் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

தாய்வானில் வாழ்ந்த 85 வயது யானை 2003ம் ஆண்டு இறந்தது. அதை விட ஒரு வயது அதிகமானதால் தாக்ஷயினியை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்ய இவ்வமைப்பினர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

திருவாங்கூர் தேவசம் போர்டு 1949ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது 10 யானைகள் இருந்தன. ஆனால் தற்போது அவற்றில் இரு யானைகளே உயிருடன் உள்ளன. அவற்றில் தாக்ஷாயினியும் ஒன்று. இந்த யானை திருவாங்கூர் அரச குடும்பத்தால் பரிசளிக்கப்பட்டது என்றும் கூறினார்.

தாக்ஷாயினியை கௌரவிக்கும் தினத்தன்று அதைப் பராமரித்து இப்போது ஓய்வில் இருக்கும் மூன்று யானைப் பாகர்களையும், தற்சமயம் பராமரித்துக் கொண்டிருக்கும் இரு பாகர்களையும் உடன் கௌரவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த விஞ்ஞானயுகத்தில் யானைகளின் வயது போன்ற பல விவரங்களை உறுதி செய்ய வழிகள் உள்ளன. ஆகையால் தங்களிடம் உள்ள 33 யானைகளின் முழு விவரங்களையும் புத்தகமாக வெளியிடப்போதாகவும். தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க