August 5, 2016 தண்டோரா குழு
இங்கிலாந்து நாட்டில் என்ன தான் ஜனநாயக ஆட்சி நடைபெற்றாலும் அங்கு மன்னர் குடும்பத்திற்கு என்று தனி மரியாதையும் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களது குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு சிறு நிகழ்வும் உலகம் முழுவதும் பேசப்படும். இன்னமும் உலகில் அவர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுக்குரிய தனி மரியாதை வழங்கப்பட்டு தான் வருகின்றது.
தற்போது அந்த நாட்டின் ராணியாக இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார். இங்கிலாந்தில் என்ன சட்ட திட்டங்கள் இருந்தாலும், ராணிக்கு என்று சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணியின் 10 வியக்கவைக்கும் அதிகாரங்கள்,அந்நாட்டின் சட்டத்தின் மூலம் எந்தத் தண்டனையும் வழங்க முடியாது. அப்படியும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அவர் அதனை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இங்கிலாந்தில் வழங்கப்படும் நைட் மற்றும் லாட்ஸ் ஆகிய இரு பிரேத்யேக பதவிகளை யாருக்கு வேண்டுமென்றாலும் வழங்கும் அதிகாரம் ராணிக்கு உள்ளது.
ராணிக்கு வரி கட்டவேண்டிய அவசியம் இல்லை இருப்பினும் தற்போதைய ராணி வரி செலுத்தி வருகிறார்.
ஐக்கிய ராஜ்யத்தில் (UK) உள்ள அனைத்து அன்னப் பறவைகளும் இவருக்குத் தான் சொந்தமாம்.ஆஸ்திரேலியா அரசை எப்போது வேண்டுமானாலும் கலைக்கும் அதிகாரம் இவருக்கு உள்ளது.
இவர் மீது மக்கள் என்ன தான் பொதுமக்கள் குறை கூறினாலும் அதற்கு விளக்கம் அளிக்கவேண்டிய அவசியம் இவருக்கு இல்லை.இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எந்த ஒரு புது மசோதாவை நிறைவேற்ற வேண்டுமானாலும் அதற்கு ராணியின் ஒப்புதல் வேண்டும்.
இங்கிலாந்து பிரதமரை வாரம் ஒரு முறை ராணி சந்திக்கலாம்.ராணியின் காருக்கு நம்பர் பிளேட் பொருத்தவேண்டிய அவசியம் இல்லை அதைபோல் அவருக்கு வாகனம் ஓட்டுவதற்கான உரிமமும் தேவை இல்லை.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இவருடைய பெயரில் தான் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அதனால் தான் இவருக்கு பாஸ்போர்ட் தேவை இல்லை என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.