October 13, 2017 தண்டோரா குழு
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 10% ல் இருந்து 8% மாக குறைக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை தமிழக அரசு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்து இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் இன்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால்,
“திரையரங்குகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்சம் 50 ரூபாய், அதிகபட்சம் 150 ரூபாயும், ஏசி தியேட்டர்களில் குறைந்தபட்சம் 40 ரூபாய், அதிகபட்சம் 100 ரூபாயும், ஏசி அல்லாத திரையரங்குகளில் குறைந்தபட்சம் 30 ரூபாய், அதிகபட்சம் 80 ரூபாயும் விதிக்கப்படும்.
மேலும்,திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பொதுமக்கள் யாரும் அதிகமாக கொடுக்கத் தேவையில்லை. கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டால் மக்கள் புகார் அளிக்கலாம். கேண்டீன்களில் விற்கப்படும் பொருட்களில் எம்ஆர்பி விலை மட்டுமே வாங்கவேண்டும். தண்ணீர் கொண்டு வர ரசிகர்களுக்கு அனுமதி தேவை. திரையரங்குகளில் அம்மா தண்ணீர் பாட்டில் விற்க அனுமதிக்க வேண்டும்.பார்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது.விரைவில் ஆன்லைன் கட்டணம் ரத்து செய்யப்படும்”. இவ்வாறு கூறினார்.