• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹிட்லர் கொடுமையின் சான்றுக்கு 43 கோடி ரூபாய்.

May 7, 2016 தண்டோரா குழு

அமெரிக்க நாட்டின் நியூ யார்க் நகரில் சுவான் ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் ஆனி ப்ரான்க் என்னும் சிறுமிக்கு சொந்தமான பேரிடேல்ஸ் எனப்படும் கற்பனை கதை புத்தகங்கள் 43 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்தச் சிறுமி யார்? எதற்காக அவளுடைய புத்தகங்கள் ஏலத்திற்குச் சென்றது என்று பார்த்தால் ஆச்சரியம் தாங்காது….

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் என்னும் சர்வதிகாரியின் ஆட்சி உலகமே மிரளும் படியாக இருந்தது. யூதர் இனத்தையே அழித்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்களை சிறைப்படுத்தி பல கொடுமைகளுக்கு ஆளாக்கினான். மேலும் சுமார் 6 கோடி யூத இன மக்களைக் கொன்று குவித்தான் அந்தக் கொடுங்கோலன்.

அவனது கொலைவெறித் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பல யூத மக்கள், தங்கள் வீட்டையும், நாட்டையும், விட்டு வெளியேறினர். அவ்வாறு புலம் பெயர்ந்த பல குடும்பங்களில் ஆனியின் குடும்பமும் ஒன்று.

ஹிட்லரிடம் இருந்து தப்பி ஜூன் 1942 முதல் ஆகஸ்ட் 1944 வரை அம்ஸ்டர்டாம் நகரில் ஒரு வீட்டின் மேலறையில் அவளுடைய குடும்பமும் அவளுடைய தந்தையின் நண்பர் குடும்பமும் மறைந்து இருந்தனர்.

அப்படி அவர்கள் இருந்த காலகட்டத்தில் சிறுமி ஆனி தன்னுடைய நாட்குறிப்பில் அன்றாட நிகழ்ச்சிகளை மறக்காமல் எழுதினாள். எதிர்பாராதவிதமாக அவளுடைய தந்தையின் நண்பர் பணத்திற்காக அவர்களைக் காட்டிக்கொடுத்தார்.

வடக்கு ஜெர்மனி நாட்டில் தற்போது உள்ள லோவர் சசோனி என்னும் நகரம் முன்னாளில் யூத சித்திரவதை முகாமாக இருந்தது. அந்த முகாமில் நச்சு காய்ச்சலால் ஆனி இறந்து போனாள்.

இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு அவளுடைய குடும்பத்தினர் ஆனியின் நாட்குறிப்பைக் கண்டு எடுத்தனர். பிறகு அந்த நாட்குறிப்புக்கு “டைரி ஆப் ஆனி ப்ரான்க்” என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த நாட்குறிப்பு சுமார் 30 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேலும் 67 மொழிகளில் அப்புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.

ஆனி மற்றும் அவளுடைய சகோதரி மர்கோட்டுக்கு சொந்தமான “கிரிம்ஸ் தேவதை கதைகள்”, “ஹன்செல் அண்ட் கிரேட்டல்” மற்றும் “ஸ்நொ ஒய்ட்” ஆகிய புத்தகங்களின் முதல் பக்கத்தில் அவர்களுடைய கையெழுத்து காணப்பட்டது என்று சவான் ஏல நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அந்தப் புத்தகங்கள் அவர்கள் எதிர்பார்த்த விலையை விட அதிக விலைக்குச் சென்றது என்று அந்த அதிகாரி கூறினார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு டட்ச் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பழைய புத்தகங்களை விற்கும் கடையில் இந்தப் புத்தகங்களை வாங்கியுள்ளனர். அதில் ஆனி மற்றும் அவளுடைய சகோதரியின் கையெழுத்து இருந்ததைப் பார்த்த பிறகு அந்தப் புத்தகங்களை ஆனியின் தந்தை ஓட்டோவிடம் திருப்பித் தர முன் வந்தனர் என்று சுவான் ஏல நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

அப்போது அந்தத் தம்பதியினர் ஓட்டோவுக்கு எழுதிய கடிதமும் பதிலுக்கு அவர் எழுதிய கடிதமும் அந்தப் புத்தகத்தில் காணப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை நியூயார்க் நகரில் நடந்த ஏலத்தில் 1977 ல் ஆனியின் தந்தை அந்த டட்ச் தம்பதியினருக்கு எழுதிய கடிதமும் இடம் பெற்றது. ’எங்களுக்கு நடந்த கொடுமையை கண்டு எங்கள் மேல் இரக்கம் கொள்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தப் புத்தகங்களை என்னுடைய பிள்ளைகளின் நினைவாக உங்களுடைய மகளுக்குக் கொடுத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்’ என்று ஓட்டோ அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தார்.

ஒட்டோவின் இந்தக் கடிதம் ஹிட்லரின் கொடுங்கோலாட்சியின் ஒரு சான்றாக உள்ளது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

மேலும் படிக்க