November 22, 2017
அமெரிக்காவில் ஒரு பெண்ணை அவர் கலந்து கொண்ட பேஸ்புக் நேரலை நிகழ்ச்சி காப்பற்றியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் பிரான்சின் சிம்ஸ் கேட்ஸ். இவர் பேஸ்புக் நேரலை மூலம் பலருடன் சேர்ந்து பிராத்தனை செய்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அருகில் அவரின் மகன் இருந்த போதும் சிறுவனுக்கு கண் தெரியாததால் உதவி செய்ய முடியவில்லை.
இந்த சம்பவத்தை பேஸ்புக் நேரலையில் பார்த்த அண்டை வீட்டுக்காரர் சிம்ஸின் மகளுக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த அவர் உடனே வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையில், அண்டை வீட்டுக்காரர் அருகிலிருந்த சுகாதார நிலையத்திற்கு தகவல் தந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர் ஒருவர், சிம்ஸின் வீட்டிற்கு வந்து, அவரை சோதனை செய்துள்ளார். சிம்ஸின் உடல்நிலை மோசமாக இருப்பதை கண்டு,உடனே ஆம்புலன்ஸ் மூலம் சிம்ஸை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பேஸ்புக் மூலம் தனது உயிர் காப்பாற்றப்பட்டதற்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார். தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.