October 28, 2016 தண்டோரா குழு
கள்ள நோட்டுகளைக் கண்டறியாமல் புழக்கத்தில் விடும் வங்கிகள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு விடுத்துள்ள அறிக்கை:
சமூக விரோதிகள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் கள்ள நோட்டுகளை மற்ற நோட்டுகளுடன் சேர்த்து வைத்து விடுவதால் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடக் கூடிய சமூக விரோதிகளை அடையாளம் காண வங்கிகள் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும். கள்ளநோட்டுகளைக் கண்டறியாமல் அவற்றை மறுபடியும் புழக்கத்தில் விடும் வங்கிகள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளநோட்டுகள் உடனே கண்டறியப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தவறுதலாக கொடுக்க நோ்ந்தாலும் அதை உடனே நல்ல நோட்டாக மாற்றி தர வேண்டும். பொதுமக்கள் முக்கியமாக வியாபாரிகள் கவனத்துடன் ரூபாய் நோட்டுகளைச் சோதித்து வாங்க வேண்டும்.
கள்ள நோட்டு என்று சந்தேகம் வரும் பட்சத்தில் அவற்றைப் புழக்கத்தில் விடும் சமூக விரோதிகள் கைது செய்யப்பட உதவ வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.