October 13, 2017 தண்டோரா குழு
வடகொரியாவில் இன்று(அக்டோபர் 13) காலை 2.9ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் இன்று(அக்டோபர் 13) காலை 2.9ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியது. வட கிழக்கு கொரியாவின் சுங்க்ஜிபேகம் பகுதியிலிருந்து சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியது என்று அமெரிக்கபுவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், “வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்திய அதே இடத்தில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இயற்கையாக ஏற்பட்டதா அல்லது செயற்கையாக ஏற்பட்டதா என்று சரியாக தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி, வட கொரியா நடத்திய அணு ஆயுத சோதனைக்கு பிறகு, அங்கு 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சோதனைக்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.