• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பொங்கல் விழாவையொட்டி தமிழன் திருவிழா

January 10, 2018 தண்டோரா குழு

பொங்கல் விழாவையொட்டி கோவையில் உள்ள நயம் எக்ஸ்பீரியன்ஸ் அமைப்பின் சார்பில் தமிழன் திருவிழா நடைபெறவுள்ளது.

கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி அருகில் உள்ள ராதாகிருஷ்ணன் மில் மைதானத்தில் வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில்கோவையில் உள்ள நயம் எக்ஸ்பீரியன்ஸ் அமைப்பின் சார்பில், பொங்கல் விழாவையொட்டி, தமிழன் திருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி நாட்டு ஆடு, மாடு, சேவல், குதிரை ஆகியவற்றின் கண்காட்சி நடைபெறுகிறது.

இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சடுகுடு, உரியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், இளவட்டக்கல் தூக்குதல், மல்யுத்தம், கம்பு சுற்றுதல், கயிறு இழுத்தல், கர்லா கட்டைச் சுற்றுதல், கில்லி, கோலி, பம்பரம் சுற்றுதல் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. அதைபோல், பெண்களுக்கு 5 கல் விளையாட்டு, நொண்டி, பல்லாங்குழி, பொங்கல் வைத்தல், கோலம் போடுதல், மண்பானை செய்தல், பூ கட்டுதல், அம்மியில் அரைத்தல், உலக்கையில் அரிசி குத்துதல் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேலும், ஒரே நேரத்தில் 2,500 பேர் பொங்கல் வைக்கும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளலாம். இதேபோல் கிராமிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புற நடனம், தவில், வில்லுப்பாட்டு, பறையடித்தல்,கும்மி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கான சிறு, சிறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. பங்கேற்பாளர்களை மகிழ்விக்கும் வகையில் மாட்டு வண்டி சவாரி, குதிரை வண்டி சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மார்க்கரேட் தாமஸ், விஜயலட்சுமி கணேசன், கங்கா தேவராஜ், எஸ்.எஸ். மியூசிக் நிர்வாக இயக்குனர் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க