• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆதரிப்பதை விட அபராதமே மேல் மக்கள் முடிவு.

June 1, 2016 தண்டோரா குழு.

சுவிட்சர்லாந்து அரசு 50,000 அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க உறுதி அளித்துள்ளது. அவர்களை அங்குள்ள 26 மாவட்டங்களும் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. அதன்படி ஓபெர்வில் கிராமத்திற்கு 10 அகதிகளைப் பராமரிக்க வேண்டிய முறை. ஆனால் அங்குள்ள மக்கள் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை

விட 200,000 பவுண்டு அபராதம் கட்ட தயார் என்று தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவின் மிகப் பெரிய பணமுள்ள நாடான சுவிட்சர்லாந்து நாட்டில் மிகச் செழிப்பான கிராமம் ஓபெர்வில் லீலி கிராமம். இது 22,000 மக்கள் ஜனத்தொகை கொண்டது. அதில் 300 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

தங்கள் பங்கிற்கு அளிக்கப்பட்ட 10 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கலாமா என்ற கேள்விக்கு அங்குள்ள மக்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்ய எண்ணினர்.

வேறு மனிதர்கள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்.

கடுமையாக உழைத்துப் பாடுபட்டு உருவாக்கிய கிராமத்தை பிற மக்களுக்காக கெடுத்துக் கொள்வதை தாங்கள் விரும்பவில்லை என்று அவர்கள் செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

ஆனால் வேறு சிலர் இதை சுயநலமிக்க மனிதாபிமானமற்ற, இன வெறிச் செயல் என்று விமர்சித்துள்ளனர். அக்கிராமத்தின் மேயர் ஆன்டிரியஸ் கிளார்னெர் இது இன வெறிச்செயல் கிடையாது என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் அகதிகள் சிரிய நாட்டு அகதிகளா அல்லது பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாகக் குடியேறவிருக்கும் அகதிகளா என்று குறிப்பிடப்படவில்லை.

சிரியன் அகதிகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். அவர்களுக்குத் தேவையான அளவு பண உதவி செய்ய கிராம மக்கள் தயாராக உள்ளனர்.

அவர்கள் அருகிலுள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு நல்ல முறையில் கவனிக்கப் படுகிறார்கள். வேறு அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க முயன்றால் அது தவறான முன் உதாரணமாகிவிடும். இன்னும் அதிக மக்கள் தங்கள் உயிரைப் பயணம் வைத்து கடல் கடந்து முயற்சி செய்வார்கள் எனத் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி இந்த வாய்ப்பைப் பயன்படுத்த பல இடைத்தரகர்கள் முயற்சிப்பார்கள். அதன் மூலம் அகதிகளின் சிறு சேமிப்பும் விரயமாகிவிடும். இவை மட்டுமின்றி மொழியும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை.

இவ்வாறு குடியேறிய மக்களின் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் மேயர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க