January 12, 2018 தண்டோரா குழு
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 35 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞராக இருந்து வருபவர் இந்து மல்ஹோத்ரா(61). இந்நிலையில் முதன்முறையாக பெண் மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக பல்வேறு நிதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி அந்த அனுபவத்தின் அடிப்படையில் கொலீஜியம் மூலம் உச்சநீதிமன்ற கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்பர். ஆனால்,இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக தேர்வுசெய்ய பரிந்துரைத்தது.
இந்து மல்ஹோத்ரா,மூத்த வழக்கறிஞர்களான ரோஹின்டன் பாலி நாரிமன், யு.யு. லலித், எல். நாகேஸ்வரராவ் ஆகியோருக்கு ஜூனியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியஅரசு இவரது தேர்வை ஏற்கும் பட்சத்தில் அடுத்த 4 ஆண்டுகள் இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார்.