January 21, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் மற்றும் அவரது மனைவி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து புஷ்ஷின் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜிம் மாக்கிராத் கூறுகையில், “92 வயது ஆகும் ஜார்ஜ் புஷ் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2௦) ஹூஸ்டன் மேதொடிஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரை மருத்துவர்கள் நன்கு கண்காணித்து வருகின்றனர். இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவருடைய துணைவியாரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை நன்கு தேறி வருகிறது” என்றார்.
அமெரிக்காவின் 41-வது அதிபராக ஜார்ஜ் புஷ் (92). அவர் 1988ம் ஆண்டு முதல் 1992 வரை 4 ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்தார். அதற்கு முன் 8 ஆண்டுகள் முன்னால் அதிபர் ரொனால்ட் ரீகன் கீழ் துணை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக வெள்ளிக்கிழமை(ஜனவரி 2௦) பதவியேற்ற டொனல்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவிற்கு தன்னால் கலந்துக்கொள்ள முடியாது என்று புஷ் கடிதம் எழுதினார்.
அதில் அவர் கூறுகையில், “என்னுடைய உடல் நிலை மோசமாக இருப்பதால் மருத்துவர்கள் என்னையும் என் மனைவியையும் பதவி ஏற்பு விழாவிற்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர்” என்றார்.