November 14, 2017 தண்டோரா குழு
இந்தோனேசியா நாட்டின் கடல்பகுதியில் 10 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது.கரை ஒதுங்கிய 10 திமிங்கலங்களில் நான்கு திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக மீனவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா கடற்கரையில், “Sperm Whales” இனத்தைச் சேர்ந்த சுமார் 10 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.திமிங்கல மீன்கள் கரை ஒதுங்கியிருப்பதை கண்டவர்கள், உடனே மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த அவர்கள், கடற்கரைக்கு விரைந்து வந்து
பார்த்தபோது, பலத்த காயங்களுடன், இரண்டு திமிங்கிலங்கள் இறந்திருப்பதை கண்டார்கள்.
மேலும்,மிகவும் பலவீனமாக இருந்து மற்ற இரண்டு திமிங்கலங்களும்,சிறிது நேரத்தில் உயிரிழந்தது. தகவல் அறிந்த உள்ளூர் மீனவர்களும், மக்களும் உடனே, அங்கு விரைந்து, கரை ஒதுங்கிய மீன்களை மீண்டும் கடலுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இந்தோனேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் திமிங்கலங்கள், டால்பின்கள், மட்டும் பல கடல் விலங்குகள் கடற்பகுதியில் கரை ஒதுங்குகின்றன. மேலும், கடந்த ஆண்டு, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்திலுள்ள ப்ரோபோளிங்கோ மாவட்டத்தின் கடல் பகுதியில், 30 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின, அவற்றில் 10 திமிங்கலங்கள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.