December 31, 2021 தண்டோரா குழு
டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் (Tata AIA Life) நிறுவனமானது தனிநபர் சார்ந்த புதிய வணிக பிரீமியத்தின் (IWNBP) அடிப்படையில் நாட்டின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிவருகிறது.
இந்நிறுவனமானது H1 FY22-க்கான முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, H1 FY22 இல் IWNBP வருவாயாக ரூ.1,593 கோடியாக காப்பீடு பதிவு செய்துள்ளது, இது H1 FY21 இல் ஈட்டிய ரூ.1,280 கோடியுடன் ஒப்பிடுகையில் 24.5% வலுவான வளர்ச்சியாகும். Q2 FY22 இல், IWNBP வளர்ச்சியானது Q2 FY21 ஐ விட (ரூ.741 கோடி) 39% வளர்ச்சியில் (ரூ.1,027 கோடி) இன்னும் சிறப்பாக பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்குனராக நிறுவனம் தனது கவனத்தையும் முதன்மையையும் தொடர்ந்து பராமரிக்கிறது. கடந்த செப்டம்பர் 2021 இல், இது நாட்டிலுள்ள தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில், மிக உயர்ந்த சில்லறை காப்பீட்டுத் தொகையைப் பதிவு செய்துள்ளது. மொத்த பிரீமியம் வருமானம் ரூ. 5,255 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ரூ. H1 FY21 இல் 4,269 கோடியுடன் 23% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதே காலகட்டத்தில், மொத்த புதுப்பித்தல் பிரீமியம் வருமானம் 27% அதிகரித்து ரூ. 2,653 கோடியிலிருந்து ரூ. 3,375 கோடியை எட்டியுள்ளது. நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துக்கள் (AUM) H1 FY22 இல் 38% அதிகரித்து H1 FY21ல் 37,409 கோடியிலிருந்து தற்பொழுது ரூ. 51,704 கோடி எனும் இடத்தை எட்டியுள்ளது.
நிறுவனமானது சமீபத்திய ஆண்டுகளில் தொழில்துறையில் முன்னணி நிதி செயல்திறனை வழங்கி வருகிறது. கடந்த மார்ச் 31, 2021 நிலவரப்படி, நிர்வாகத்தின் கீழ் உள்ள டாடா ஏஐஏ லைஃப்-இன் சொத்துக்களில் 99.93% எனும் ரேட்டிங்குடன் 5 ஆண்டு மதிப்பீட்டில் 4 நட்சத்திரம் அல்லது 5 நட்சத்திரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களில் 82% ஆனது மார்னிங்ஸ்டார் மூலம் அதே காலகட்டத்தில் 5-நட்சத்திரம் என மதிப்பிடப்பட்டது.
செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த டாடா ஏஐஏ லைஃப் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ நவீன் தஹிலியானி பேசும்போது, “
பாதுகாப்பு மற்றும் சேமிப்பு வகைகளில் எங்களின் வலுவான செயல்பாடானது, எங்களின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும். வசதியான சேவை மற்றும் எளிதில் அணுகக்கூடிய தளங்கள் மூலமாக சிறந்த ஆயுள் காப்பீட்டு தீர்வுகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
நாங்கள் எதிர்நோக்கும்போது, எங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு லைஃப், வெல்த், மற்றும் ஹெல்த் தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்யும் புதுமையான தீர்வுகளை நாங்கள் அறிமுகப்படுத்துவோம்” என்றார்.
டாடா ஏஐஏ லைஃப் நிறுவனமானது அனைத்து விதமான நுகர்வோர் அளவுருக்களிலும், மிகவும் ஆரோக்கியமான செயல்திறனைத் தொடர்ந்து வழங்கிவருகிறது. குறிப்பாக, கோவிட்-19 தொற்றுநோயின் பாதகமான தாக்கம் இருந்தபோதிலும், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 87.10% ஆக இருந்த மதிப்பீடானது 13வது மாத நிலைத்தன்மையாக 88.50% ஆக உயர்ந்திருந்தது. அதுவும், FY21 இல், தனிநபர் இறப்பு உரிமைகோரல் செட்டில்மெண்ட் விகிதம் 98.02% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிறுவனமானது தனியுரிம சேனல்கள் மற்றும் கூட்டாண்மை தலைமையிலான விநியோக நெட்வொர்க்கின் ஆரோக்கியமான கலவையை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 12,000 கிளைகள் மற்றும் 100 மில்லியனுக்கும் அதிகமான சில்லறை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அணுகலை வழங்க முன்னணி உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வங்கிகளுடன் பார்ட்னர்களாகவும் செயல்படுகிறது. கடந்த செப்டம்பர் 2021 நிலவரப்படி, டாடா ஏஐஏ லைஃப் ஆனது 50,000 க்கும் மேற்பட்ட முகவர்களைக் கொண்டுள்ளது, அவர்கள் ஆயுள் காப்பீட்டு விநியோகத்தை முழுநேர தொழிலாக மேற்கொண்டுவருகிறார்கள்.