July 7, 2017 தண்டோரா குழு
ஜெர்மனியில் இன்று முதல் நடைபெறும் G20 மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
ஜெர்மனியில் இன்று(ஜூலை 7) முதல் G20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல உலக தலைவர்கள் கலந்துக்கொள்கின்றனர். உலக தலைவர்கள் வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வந்திருந்தார். அவரை ஜெர்மனி வேந்தர் அஞ்செலா வரவேற்றார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அந்த மாநாட்டிற்கு வந்திருந்த தலைவர்களை எதிர்த்து புரட்சியாளர்கள் கருப்பு உடையணிந்து, “Welcome to Hell” என்று கோஷம் எழுப்பியுள்ளனர். அவர்களை கலைந்துபோகும்படி போலீசாருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் கலைந்துபோக மறுத்துவிட்டனர்.
போலீசார் மீது செங்கல், பாட்டில்களை தூக்கி புரட்சியாளர்கள் வீசியுள்ளனர், போலீசார் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதனால் போலீசாருக்கும் புரட்சியாளர்களுக்கும் மோதல் ஏற்பாட்டுள்ளது.
இந்த மோதலில் சுமார் 75 போலீசார் காயமடைந்துள்ளனர். புரட்சியாளர்களை கலைந்து போக செய்வதற்காக போலீசார், கண்ணீர் புகை, தண்ணீர் ஆகியவற்றை கொண்டு புரட்சியாளர்களை கலந்துபோக செய்துள்ளனர். இச்சம்பவத்த்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்று தகவல் தெரியவில்லை.