• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கங்கை நீர் இனி நமது வீட்டு வாயிலில்

July 14, 2016 தண்டோரா குழு

கங்கையில் மூழ்கி எழுந்தால் செய்த பாவங்கள் கரைந்து விடும் என்பது பெரும்பாலோரின் நம்பிக்கை.

இந்தக் கோடியிலிருக்கும் ராமேஸ்வரத்தில் வாழும் நபருக்குக் கங்கை நீர் தேவைப்பட்டால் அவர்களே நேரில் சென்றோ அல்லது மற்றவர்களிடம் கொண்டு வரும்படியோ சொல்லவேண்டும். மதச் சடங்குகள் பலவற்றிற்கும், இறந்தவர்களுக்கு அளிக்கும் இறுதி நீராகவும் கங்கை நீர் நம்மோரால் பயன்படுத்தப்படுகிறது.

கங்கையில் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. பல தருணங்களில் பாதி எரிந்து கொண்டிருக்கும் போதே அவை நீரில் இழுத்து விடப்பட்டு, அடுத்த தகனம் தொடங்கிவிடும். அதுமட்டுமின்றி விலங்குகளின் உயிரற்ற சடலங்களும், கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் இன்ன பல தேவையற்ற பொருட்களும் கங்கை நீரை மாசு படுத்துகின்றன.

இருப்பினும் இவற்றைப் புறம் தள்ளி அதன் புனிதத் தன்மையை மட்டும் போற்றும் பல கோடிக்கணக்கான இந்து மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமான சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது. கடிதங்கள் எப்படி நமது வீட்டு வாயிலில் அஞ்சல்துறையினால் விநியோகிக்கப்படுமோ அவ்வாறே தேவைப்பட்டோருக்கு தபால் மூலம் கங்கை நீரும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்தச் சேவையை மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கடந்த ஞாயிறன்று பாட்னாவில் ஆரவாரத்துடன் தொடங்கி வைத்தார்.

வழக்கமாக கங்கைக்குச் சென்று திரும்புபவர்கள் கங்கை நீரை எடுத்து வந்து மாதக்கணக்கில் வைத்து தேவையான நிகழ்ச்சிக்குப் பயன்படுத்துவார்கள். தற்போது அரசின் இந்தச் சேவையால் தேவைப்பட்டபோது புதிதாக கங்கை நீர் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து, குறைந்த தொகைக்கு, சுகாதாரமான நீர் வினியோகம் செய்யப்படுகிறது.

புனிதமான கங்கைநீர் கங்கோத்ரி, மற்றும் ரிஷிகேஷ் நீர் நிலையிலிருந்து எடுக்கப்பட்டு லாப நோக்கின்றி மின் வணிகம் மூலம் மக்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயல் நாட்டினரின் வேண்டுகோளுக்கிணங்க அயல் நாட்டுத் தூதரங்களிலும், உயர் ஆணையகங்களிலும், சில்லறை விற்பனை நிலையங்கள் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் மனோஜ்
சின்ஹா தெரிவித்துள்ளார்.

இப்புனித நீர் 250 மிலி, 500 மிலி பாகெட்டுகளில் 28 மற்றும் 38 ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேப் போன்று திருப்பதி லட்டு போன்ற இந்துக்களின் கலாச்சார சம்பந்தப்பட்ட பிரசாதங்களும் அஞ்சல்துறை மூலம் விநியோகிக்க எடுக்கப்பட்ட முடிவு அரசின் மிகச்சிறந்த சாதனை என்றும் ஆத்மதிருப்தி அளிக்கக் கூடிய ஒன்று என்றும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க