August 19, 2016 dnaindia.com
இந்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்காக பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் ராஜதானி விகிதா என்னும் இடத்தில் மரத்திற்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஸா பந்தன் பண்டிகை கொண்டியுள்ளார்.
பெண்கள் தங்களது சகோதரர் மற்றும் சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கு ராக்கி அணிவிக்கும் தினமே ரக்ஷா பந்தன் விழாவாகும். இந்தப் பண்டிகை வியாழக்கிழமை அன்று நாடு முழுவதும் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.
மேலும் குறிப்பாக வட மாநிலங்களில் ரக்ஷா பந்தன் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, பரிசு பெற்று மகிழ்ந்தனர்.
மேலும் இப்பண்டிகை மௌரிசியஸ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் விமர்சனமாகக் கொண்டாடப்படுகிறது.பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநிலம் முழுவதும் பச்சைப்பசேல் என்று தோன்றும் வகையில் மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார்.
இதைக்குறித்து நிதிஷ் குமார் பேசுகையில், ‘இந்த மங்களகரமான நன்னாளில் மரங்களுக்கு ராக்கி கயிற்றை பீகார் மாநிலத்தில் மரங்களுக்கு அணிவிக்கும் ஒரு புதிய பாரம்பரியத்தைத் துவங்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும், மக்கள் தங்கள் சகோதர்களை எப்படி நேசிக்கிறார்களோ அதே போல மரங்களையும் நேசிக்க வேண்டும் என்று கூறினார்.