• Download mobile app
16 Sep 2024, MondayEdition - 3141
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோமியத்தில் இருந்து தங்கம். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.

June 29, 2016 தண்டோரா குழு

நமது முன்னோர்கள் கோமியம் எனக் கூறப்படும் பசுவின் சிறுநீரை பூஜைகளில் பயன்படுத்துவர். பூஜைக்குப் பின் பிரசாதமாக அதை உட்கொள்ளவும் கொடுப்பார்கள். நாட்டு மருந்துகளில் கோமியத்தின் பங்கு அதிகம். நோய்களை எதிர்க்கக் கூடிய, மற்றும் தீர்க்கக் கூடிய பலவிதமான மருத்துவ குணங்கள் அடங்கியது என்பது இவர்களது கணிப்பு.

பசுவின் தனித்தன்மை என்னவென்றால், பசு நஞ்சை உண்டிருந்தாலும் அதன் பாலில் நஞ்சு இறங்காது என்பதே. மூதாதையர்களின் கணிப்பு என்றுமே பொய்த்ததில்லை. நமது விஞ்ஞானிகள்
கோமியத்தில் தங்கம் இருப்பதை ஆராய்ச்சியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். JAUவின் உணவுப் பரிசோதனைக்கூடம் NABL (National Accreditation Board for Testing Calibration Laboratories) ஆராய்ச்சிக் கூடத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 50,000ம் பொருட்கள் அதாவது காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தேன், பூச்சிக் கொல்லி, போன்ற பல வகையான பொருட்களை இம்மையம் ஆராய்ச்சி செய்கிறது.

குஜராத் மாநிலத்தில் ஜுனகத்தில் உள்ள பெயர் பெற்ற கிர் பசுக்களின் சிறுநீரை JAU (Junagadh agricultural University) விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் ஒரு லிட்டர் கோமியத்தில் 3 மில்லி கிராம் முதல் 10 மில்லி கிராம் வரை தங்கம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவை நீரில் கரையக் கூடிய தங்க உப்புகளாகக் காணப்படுகின்றன என்று கூறியுள்ளனர். இந்த ஆராய்ச்சி டாக்டர்.B.A.கொலகியா தலைமையில் ஜைமின், ராஜேஷ், விஜய், சாரதா ஆகியோரின் உதவியோடு நடைபெற்றது. சுமார் 400 கிர் பசுக்களின் சிறுநீரின் மாதிரிகளைப் பரிசோதித்தனர்.

5,100 ரசாயன உப்புக் கலவை கொண்ட பசுக்களின் சிறுநீற்றில் 388 உப்புக்களின் கலவை, மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாகவும், இதன் மூலம் தீராத பல நோய்களைத் தீர்க்க முடியும் என்றும் கண்டறிந்தனர். சிறுநீரிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுத்து, பின் ரசாயன முறைகளைப் பயன்படுத்தி தங்கத்தை உறைய வைக்கலாம் என்றும் கண்டறிந்தனர்.

இதே போல், ஒட்டகம், எருமை, ஆடு ஆகியவற்றின் மேல் இவர்களது ஆராய்ச்சி பலனளிக்கவில்லை. சுமார் 39 வகையான உள்நாட்டுப் பசுக்களின் மீதும் இவர்களது ஆராய்ச்சி நீண்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி மூலம் மனித இனத்தை நோய்களிலிருந்து காப்பாற்றும் வழியையும், தாவரங்களைப் பாதுகாக்கும் முறைகளையும் கண்டறிய முடியும் என்று கொலகியா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க