December 27, 2017 தண்டோரா குழு
இந்தியாவில் வாழ்ந்த பழம்பெரும் உருது புலவர், மிர்சா காலிப்பின் 220வது பிறந்தநாளையொட்டி, கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
கடந்த 18ம் நூற்றாண்டில், இந்தியாவில் வாழ்ந்த பழம்பெரும் உருது புலவர், மிர்சா காலிப்.உருது மற்றும் பெர்சிய மொழியில் கவிதை எழுதும் புலவர்களில் புகழ்பெற்ற கவிஞர் ஆவார்.தனது 11வயது முதல் கவிதை எழுத தொடங்கினார்.
மேலும்,ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றும்போது, முகலாயர்களின் ஆட்சி காலத்தின் இறுதியில் இருந்த காலக்கட்டத்திலும், மிர்சா காலிப் தனது கவிதைகளை தொடர்ந்து எழுதினார்.முகலாய பேரரசின் கடைசி மன்னராக இருந்த பகதூர் ஷா சபார், மிர்சா காலிப்புக்கு
‘Dabir-ul-Mulk’மற்றும் ‘Najm-ud-Daula’ ஆகிய பட்டங்களை வழங்கினார்.
கடந்த 1869ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15ம் தேதி, மறைந்த மிர்சா காலிபின் கவிதைகள் இந்திய நாட்டின் இளைஞர்களை மட்டும் கவராமல், உலகெங்கும் உள்ள இளைஞர்களையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.