January 18, 2018 தண்டோரா குழு
நடப்பாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு ஜனவரி 12 ஆம் தேதி அரசிதழில் பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றகிளை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வெளியிடப்பட்ட அரசாணையில் 2017ம் ஆண்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் 2018ம் ஆண்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம் எனவும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஏன் தடை விதிக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு ஜல்லிக்கட்டு போட்டியை ஜன.14 முதல் ஜன.31க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஜன.12ல் வெளியிடப்பட்ட அரசாணையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
மேலும், தமிழகத்தில் இந்த ஆண்டு 84 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.