October 25, 2017 தண்டோரா குழு
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிச.9 மற்றும் 14-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14 தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி அறிவித்துள்ளார்.
குஜராத்தில் தற்போதைய சட்டசபையின் பதவி காலம் வருகிற 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது.இதனையடுத்து இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலுடன் குஜராத் சட்ட சபைதேர்தல் நடத்தப்படும் என ஏதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாச்சலப் பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு, டிசம்பர் 9ம் தேதியும், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.மேலும், தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18ம் தேதி எண்ணப்படும்.