• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி

August 5, 2016 தண்டோரா குழு

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக நிதின் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஆனந்திபென் படேல், சமீபத்தில் அறிவித்தார். பா.ஜ.வின் உயர்மட்ட குழுவான, பார்லிமென்ட் குழு கூட்டத்தில், ஆனந்திபென் படேலின் ராஜினாமா ஏற்கப்பட்டது. தனது ராஜினாமா குறித்து விரைவில், 75 வயது நிறைவடைவதால், இளைஞர்களுக்கு வழிவிட்டு, முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன் என, ஆனந்தி பென் விளக்கமளித்தார். இதனையடுத்து அடுத்த முதல்வருக்கான போட்டி நிலவியது. விஜய் ரூபானி மற்றும் நிதின் பட்டேல் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் காந்தி நகரில் உள்ள பா.ஜ. தலைமை அலுவலகத்தில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம், இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பா.ஜ தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சரோஜ் பாண்டே, பா.ஜ எம்.ஏல்.ஏ.,க்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில், விஜய் ரூபானி முதல்வராக அறிவிக்கப்பட்டார். இவர் குஜராத் மாநில பா.ஜ., தலைவராகவும் உள்ளார்.

குஜராத்தின் புதிய முதல்வராகத் தேர்வாகி உள்ள விஜய் ரூபானி, 60, 1956 ஆக., 2ல் பிறந்தார். பி.ஏ., எல்.எல்.பி., பட்டம் பெற்றவர். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மூலம் பொது வாழ்வைத் துவக்கினார். மேலும் மாணவராக இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ்., மாணவர் சங்க தலைவராகவும் இருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இருந்த இவர், 1971ல் ஜன் சங் அமைப்பிலும் சேர்ந்தார். ஜன் சங் தான் 1980ல் பா.ஜ., வாக உருவெடுத்தது. தற்போதைய குஜராத் அமைச்சரவையில், நெருக்கடி நிலையின் போது சிறை சென்றவர் இவர் ஒருவரே.

ராஜ்கோட் நகர மேயர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., ஆகிய பதவிகளை வகித்துள்ளார். குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, இவர் குஜராத் மாநில பா.ஜ., பொதுச் செயலராக பதவி வகித்தார். 2014ல் குஜராத் சட்டசபை சபாநாயகராக இருந்த வஜூபாய் வாலா என்பவர், ராஜினாமா செய்ததால், ராஜ்கோட் மேற்கு சட்டசபை இடைத்தேர்தலில் 23,740 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். ஆனந்தி பென் அமைச்சரவையில், போக்குவரத்து, குடிநீர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகப் பதவி வகித்தார்.

குஜராத் துணை முதல்வராகத் தேர்வாகி உள்ள நிதின் படேல், 60 தற்போது குஜராத் மாநில சுகாரதாரம், குடும்ப நலத் துறை, மற்றும் சாலை மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

மேலும் படிக்க