December 18, 2017 தண்டோரா குழு
இரண்டு மாநில தேர்தல்களிலும் பாஜகவுக்கு வெற்றி என்பதை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி கையசைத்தார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 106 இடங்களிலும், காங்கிரஸ் 75 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் ஆட்சியை தொடர தேவையான 92 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. இதனால் 6-வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அதைப்போல் இமாசலப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 41 தொகுதியிலும், காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் மற்றவை 5 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றம் செல்லும் போது பிரதமர் நரேந்திர மோடி 2 மாநில தேர்தல்களிலும் பாஜகவுக்கு வெற்றி என்பதை வெளிப்படுத்தும் வகையில் இரட்டை விரலை காட்டி விட்டு நாடாளுமன்ற கூட்டத்துக்கு மோடி சென்றார்.