September 25, 2018
தண்டோரா குழு
குட்கா முறைகேடு வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் சிவக்குமாரை சிபிஐ இன்று கைது செய்தது.
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர்,முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு,விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்,முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகள் உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து,குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில்,தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சிவக்குமாரை அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.