• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதவி செய்ய மனம் இருந்தால் போதும்.. வழி தானாகப் பிறக்கும்.

June 13, 2016 தண்டோரா குழு

தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்ய ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியைப் பின்பற்றுவர். பாடகராயிருந்தால் இசை நிகழ்ச்சி நடத்தி வசூல் செய்வர். நடிகராயிருந்தால் நாடகம் நடத்தி தொகை அளிப்பர். மற்றவர் தனது சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தானத்திற்கென ஒதுக்குவர்.

அமெரிக்காவின் கோடீசுவரரான வாரென் புஃவெட் என்பவர் சிறிது வித்தியாசமாக, தன்னுடன் மதிய உணவு உண்ண விரும்புவார்களை e-bay மூலம் தொகையை நிர்ணயித்துள்ளார். ஏல முறைப்படி அதிக தொகை செலுத்த முன்வருபவர்களே அவருடன் உணவருந்துவர். இதன் மூலம் கிடைக்கும் பணத்தைத் தொண்டு நிறுவனத்திற்குத் தானமாக கொடுத்து வருகிறார்.

புஃவெட் இரண்டாவது வருடமாக இந்த முறையைக் கையாளுகிறார். கடந்த ஞாயிறன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை ஏலம் நடத்தப்பட்டது. இந்த முறை அனைவரும் வியக்கும் வண்ணம் 3.4 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் ஏலத்தில் குறிப்பிட்டுள்ளார். இது கடந்த வருடம் பீஜிங்கைச் சேர்ந்த டாலியன் சூயிஸ் எண்டர்டெயின்மென்ட் கம்பெனி, கொடுத்த ஏலத்தொகையைவிட 3,00,000 டாலர் அதிகம்.

புஃவெட் இத்தொகையை சான்ஃவ்ரான்சிஸ்கோவில் உள்ள கிளைட் ஃபவுண்டேஷன் அனாதை அமைப்பிற்கு வழங்குவது வழக்கம்.

புஃவெட்டின் முதல் மனைவி சுசீ புஃவெட், கிளைட் ஃபவுண்டேஷனில் தன்னார்வத்தோடு தொண்டாற்றி வந்தார். கடந்த 2004ல் அவர் மரணமடைந்தார். எனினும் புஃவெட்க்கும் கிளைட் அமைப்புக்கும் இருந்த தொடர்பு மட்டும் நீடித்தது.

ஒவ்வொரு வருடமும் இயன்ற தொகையை வசூல் செய்து தானத்திற்கு வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இதுவரை 2 மில்லியன் அமெரிக்க டொலர் வீதம் 10 பேரிடம் வசூலித்த 20 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை கிளைட் அமைப்புக்கு அளித்துள்ளார்.

இந்த முறை கிடைத்துள்ள ஏலத்தொகை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புஃவெட் அவர்களின் ஆழமான அன்பும் அரவணைப்புமே இவ்வெற்றிக்குக் காரணம் என கிளைட் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் உணவு வழங்கும் முறை, உடல் நலத்தைப் பேணும் முறை, அங்குள்ளவர்களை வேலைக்குத் தயாராக்கும் முறை, புனர் வாழ்வு அமைத்துக் கொடுக்கும் விதம், மற்றும் ஏழைகளுக்கும், வீடற்றவர்களுக்கும் வீடு அமைத்துக் கொடுக்கும் விதம் போன்ற கிளைட் அமைப்பின் சிறந்த சேவையே புஃவெட்ஐ அதன்பால் ஈர்த்தது எனலாம்.

விரக்தியின் விளிம்பில் தவிக்கும் பல்லாயிரக் கணக்கானோருக்கு அவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்வதின் மூலம் ஒரு கௌரவமான வாழ்க்கையை அளிக்க முடிந்ததில் தான் பெருமிதம் கொள்வதாக புஃவெட் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க