• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்கா உச்சத்தை எட்டும் என ஹிலாரி கிளண்டன் நம்பிக்கை

November 18, 2016 தண்டோரா குழு

நாட்டு மக்களிடையே ஆழமான பிளவுகள் ஏற்பட்டுள்ள போதும், அதைத் தாண்டி அமெரிக்கா உச்சத்தை எட்டும் என வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுகூட்டத்தில் ஹிலாரி கிளண்டன் தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ம் தேதி(நவ.,8) நடந்தது.

இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அறிவிக்கப்பட்டார்.இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாக இருந்தது.

இந்தியர்களின் ஆதரவை பெற இருகட்சிகளும் கடுமையாக முயற்சி செய்தன. ஹிலாரி கிளிண்டனுக்கே இந்தியர்களின் ஆதரவை பெரும்பாலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவை அனைத்தையும் பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்றார். அத்துடன் அமெரிக்க பார்லிமென்டில் அதிக இடங்களை குடியரசு கட்சி பெற்றதால், ஹிலாரி ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

டொனால்ட் டிரம்பின் வெற்றியை எதிர்த்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.
இந்நிலையில் வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேர்தல் தோல்விக்கு பின் முதன்முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹிலாரி பேசியதாவது:

தேர்தல் தோல்வியால் நீங்கள் அடைந்துள்ள அதிருப்தி போலவே எனக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தோல்வியை கண்டு மனம் தளராமல், தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

நாட்டு மக்களிடையே ஆழமான பிளவுகள் ஏற்பட்டுள்ள போதும், அதைத் தாண்டி அமெரிக்கா உச்சத்தை எட்டும். நாட்டின் மீது நம்பிக்கை வைத்து, நம் மதிப்புகளைக் காக்கப் போராடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க