• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மசூதியைப் புதுப்பிக்க இந்து கோயில் முனைப்பு

September 1, 2016 தண்டோரா குழு

அயோத்தியில் 24 வருடங்களுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அதன் விளைவாக இந்து முஸ்லீம் கலவரம் வெடித்ததும், பலர் உயிரிழந்ததும் இரு மதத்தினரிடையே இருந்த வெறுப்பிற்குச் சான்று.

ஆனால், இன்று அதே அயோத்தியில் இஸ்லாமியரின் பள்ளிவாசலை இந்து அறக்கட்டளை புதுப்பிக்கவும், தொழுகை நடத்த அனுமதிக்கவும் இசைந்துள்ளது என்றால்,இந்துக்களும்,இஸ்லாமியரும் இருகண்கள் என்ற சான்றோர் வாக்கு பலிக்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே துளிர்விடத் தொடங்கியுள்ளது.

அயோத்தியில் 1765 ஆண்டு அப்போதைய நவாப் ஷுஜௌட்டௌலஹ் அவர்களால் ஹனுமங்கரி கோயில் கட்டுவதற்காக அர்கரா என்ற இடத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது.அந்த இடத்தின் ஒரு புறத்தில் முகலாய சக்ரவர்த்தி ஔரங்கசீப்பால் கட்டப்பட்ட ஆலம்கிரி மசூதி முகலாயர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.தொழுகைக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இடம் ஹனுமான் கோயிலுக்கு நவாப் அவர்களால் அளிக்கப்பட்டது.

ஆனால்,இந்த மசூதி நாட்பட தொழுகையும் நடைபெறாமல், தகுந்த பராமரிப்பும் இன்றி கேட்பாரற்று, சிதிலமடைந்து விட்டது.இந்நிலையில் உள்ளூர் மாநகராட்சி,மசூதிக்குள் மக்கள் செல்வது ஆபத்தானது என அறிவித்தது.

இதையறிந்த ஹனுமங்கரி கோயில் நிர்வாகம் மசூதியைச் செப்பனிட ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாகவும், முன்பு போல் அங்குத் தொழுகை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.இதைப்பற்றிக் கோயில் நிர்வாகத் தலைவர் மஹான்ட்ஞ்சான் தாஸ் கூறுகையில், மசூதியின் பழுது பார்க்கும் செலவைத் தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும், தொழுகைக்கு எந்தத் தடையும் வராது,ஏனெனில் இதுவும் ஆண்டவனின் வீடே என்று முஸ்லீம் சகோதரர்களிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

அது மட்டுமின்றி மசூதிக்குள் கட்டப்பட்டுள்ள கல்லறையையும் புதுப்பிக்க ஆவன செய்யுமாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.முஸ்லீம் இனத்தவர்கள் கோயில் நிர்வாகத்தின் இந்தச் செயலுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள் என்று உள்ளூர் முஸ்லீம் தலைவர் சாதிக் அலி கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க