• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாயமான விமானத்தின் பாகங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியானதால் பரபரப்பு

August 20, 2016 தண்டோரா குழு

மாயமான ஏ.என்.32 விமானத்தைத் தேடும் பணியின் போது விமானத்தின் பாகங்கள் என்று சந்தேகிக்கப்படும் பொருள்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

29 பயணிகளுடன் புறப்பட்ட ஏ.என்.32 விமானம், சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமான் செல்லும் வழியில் கடந்த ஜூலை 22ம் தேதி மாயமானது.சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்ட 15வது நிமிடத்தில் அந்த விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து ஹெலிகாப்டர்கள், அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள், உதவியுடன் விமானத்தைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.ஆனால் விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இந்திய புவியியல் ஆய்வு துறையின் சாமுத்ரா ரத்னாகர் கப்பல், விமானத்தைத் தேடும் பணியில் ஆகஸ்ட் 8ம் தேதி களமிறக்கப்பட்டது.5 கிலோ மீட்டர் ஆழம் வரை ஸ்கேனிங் செய்யும் திறனுடைய இந்தக் கப்பல் விமானம் மாயமான இடம் என்று கருதப்படும் கடல் பகுதியில் நான்காயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடும் பணியை மேற்கொண்டது.

அப்போது விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.மேலும் அவற்றை வெளியே எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் அவை மாயமான ஏ.என்.32 விமானத்தின் பாகங்கள் தானா என உறுதியாகிவிடும் என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் விமானத்தைத் தேடும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே சென்னை கடல் பகுதியிலிருந்து 270 கி.மீ. தொலைவில் சாகர் நிதி என்ற அதிநவீன கப்பலும் தேடுதல் பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க