• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ. 500 செலவில் ஐ.ஏ.எஸ். காதலர்களின் திருமணம்!

November 30, 2016 தண்டோரா குழு

ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி திங்கள்கிழமை (நவம்பர் 28) தனது திருமணத்தை 500 ரூபாயில் நடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டினால் பலரும் தங்கள் திருமணத்தைச் சிக்கினமாக நடத்தி வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் விஞ்சும் வகையில் ஐ.ஏ.எஸ். காதலர்கள் வெறும் ரூ. 500 செலவில் திருமணம் செய்து கொண்டு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

ஆசிஷ் வசிஷ்ட், சலோனி ஆகியோரின் இந்தத் திருமணம் சமூக வலைதளத்தில் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஆசிஷ் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர். அவரும் பஞ்சாபைச் சேர்ந்த சலோனியும் முசோரியில் 2013 ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருந்தனர். அப்போது, அவர்களிடையில் காதல் மலர்ந்தது.

பயிற்சியை நிறைவு செய்த ஆசிஷ் வசிஷ்டா மத்தியப்பிரதேச மாநிலம் கோகாக் மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியாறுகிறார். சலோனி தெலுங்கானா மாநிலம் விஜயவாடாவில் துணை ஆட்சியராகப் பணி புரிந்து வருகிறார்.

இந்தக் காதலர்கள் திங்கள்கிழமை திருமணம் செய்துகொண்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்றாலும் விளம்பரம் ஏதுமில்லாமல், எந்தச் செலவும் இல்லாமல், இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன், மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் மாலை மாற்றிக் கொண்டு, திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர்.

ஆசிஷ், சலோனி திருமணத்தை நடத்திவைத்த மாஜிஸ்திரேட் இளையராஜா இருவரும் இறுதி வரை ஒன்றாக நல்ல தம்பதிகளாக வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

எளிமையாகவும் அழகாகவும் நடந்த இவர்களது திருமணத்திற்கு அலுவலக ஊழியர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க