July 12, 2017
தண்டோரா குழு
இந்தியாவின் முண்ணனி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஐ.எம்.பி.எஸ்(IMPS)சேவை மூலம் பணப்பரிமாற்ற செய்ய சேவைக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியில் ஜூலை 1 முதல் ஆயிரம் ரூபாய் வரை ஐ.எம்.பி.எஸ்(IMPS) மூலம் பணப்பரிமாற்ற செய்ய கட்டணங்கள் கிடையாது. ஆனால் ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம் பரிமாற்றம் செய்ய ஐந்து ரூபாயும், ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய பதினைந்து ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இத்தகவலை எஸ்.பி.ஐ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.மேலும் ஐ.எம்.பி.எஸ் சேவையின் மூலம் எந்த நேரத்திலும் பணப்பரிமாற்றத்தை உடனடியாக மேற்கொள்ளலாம்.