• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசுடைமை ஆக்குவதா? ஸ்டாலின் கண்டனம்

December 31, 2016 தண்டோரா குழு

தமிழக மீனவர்களைப் பிடித்துச் செல்லும் இலங்கை கடற்படை அவற்றை தங்கள் நாட்டுக்கு அரசுடைமையாக்குவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று தி.மு.க. பொருளாளாரும் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டித்தார்.

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளைச் சொந்தமாக்கிக் கொள்வோம்” என்று இரக்கமற்ற முறையில் இலங்கை அரசு முடிவு எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது.
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண 27.1.2014-ல் தொடங்கி நான்கு முறை இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இறுதியாக 2.11.2016 ம் தேதி இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் தில்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதன் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் தலைமையில் 5.11.2016ம் தேதி “அமைச்சர்கள் நிலையிலான கூட்டம்” நடைபெற்று இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. குறிப்பாக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில், செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லையில் பாரபட்சமின்றி இருதரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் கூடிய மீன்பிடி உரிமை வேண்டும் என தமிழக மீனவர்களின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், அதை பிடிவாதமாக இலங்கை அரசு ஏற்க மறுக்கிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு கண்டு கொள்ளவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் தாக்குதல் அதிகரித்துள்ளது.

இவற்றைத் தடுக்க தமிழக அரசு அழுத்தம் தரவில்லை. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பிக்கவும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உரிய அழுத்தத்தை தூதரக ரீதியாகவோ, இந்திய பிரதமரே நேரில் தலையிட்டோ முடிவு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்கும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க