December 19, 2017 தண்டோரா குழு
வெளிநாடுகளுக்கு குடியேறியவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டுக்கான சர்வதேச புலன்பெயர்ந்தோர் அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது.அதன்படி, வளைகுடா நாடுகளில் வாழும் சுமார் 16.59 மில்லியன் மக்களில் பாதிபேர் இந்தியர்கள்.கடந்த 2000ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த சுமார் 7.89 மில்லியன் இந்தியர்களை விட தற்போது, இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2௦௦௦ம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை 978,992 லட்சம் ஆக இருந்தது. ஆனால், தற்போது அவர்களுடைய எண்ணிக்கை சுமார் 3.31 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 1.04 மில்லியன் ஆக இருந்தது. தற்போது 2.3 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
சவூதி அரேபியாவில் 2,27 மில்லியன், ஓமானில் 1.2 மில்லியன் மற்றும் குவைத்தில் 1.16 மில்லியன் பேர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2௦௦௦ம் ஆண்டு, ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை 665,105 லட்சம் ஆக இருந்தது. ஆனால், அவர்களுடைய எண்ணிக்கை 1.3 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. அதே ஆண்டில், பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை 452,144 லட்சம் ஆக இருந்தது, தற்போது 836,524 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதேபோல் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை 319,138 லட்சம் ஆக இருந்தது, தற்போது 602,144 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.ஆஸ்திரேலியாவில் 90,719லட்சத்தில் இருந்து நான்கு மடங்கு அதிகமாகி, தற்போது 408,880லட்சம் ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்கள் 5.2 மில்லியன் பேர் ஆவர். ஆனால், கடந்த 2000ம் ஆண்டிற்கு பிறகு அவர்களுடைய எண்ணிக்கை 1.22 மில்லியன் ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.