September 20, 2016 தண்டோரா குழு
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கபடி போட்டிக்கான இன்று இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கபடி போட்டிஅடுத்த மாதம் 7-ஆம் தேதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஈரான், தென் கொரியா, வங்கதேசம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலந்து, தாய்லாந்து, ஜப்பான், ஆர்ஜென்டீனா, கென்யா,இந்தியா என மொத்தம் 12 நாடுகள் பங்கேற்கின்றன.
இத்தொடரில் பங்கேற்கும் மொத்தம் 14 வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு ஹரியானாவைச் சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரரான அனுப் குமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்: அனுப் குமார் (ஹரியானா), அஜய் தாகுர் (ஹிமாச்சலபிரதேசம்), தீபக் ஹூடா (ஹரியானா), தர்மராஜ் சேரலாதன் (தமிழ்நாடு), ஜஸ்வீர் சிங் (ஹரியானா), கிரண் பர்மர் (குஜராத்), மன்ஜீத் சில்லார் (பஞ்சாப்), மோஹித் சில்லார் (பஞ்சாப்), நிதின் தோமர் (உத்தரப்பிரேதசம்), பிரதீப் நர்வால் (ஹரியானா), ராகுல் செளத்தரி (உத்தரப்பிரதேசம்), சந்தீப் நர்வால் (ஹரியானா), சுரேந்தர் நடா சுர்ஜீத் (ஹரியானா).
இந்திய கபடி அணிக்கான பயிற்சியாளராக பல்வான் சிங்கும், துணை பயிற்சியாளராக பாஸ்கரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.