January 10, 2018 தண்டோரா குழு
கடந்த 2016ம் ஆண்டு காஷ்மீரில் நடந்த கலவரத்தின்போது, பெல்லேட் துப்பாக்கி குண்டால் கண்பார்வையை இழந்த பெண், 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில், பாதுகாப்பு படையினருக்கும் காஷ்மீர் புரட்சியாளர்களுக்கும் இடையே நடந்த சண்டையில், பெல்லேட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது. அந்த துப்பாக்கி சூட்டில், நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் கண்பார்வை இழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.காஷ்மீர் நகரின் சோப்பின் மாவட்டத்தை சேர்ந்தவர் இஷா முஷ்டக்(15). பெல்லேட் துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட விபத்தில், கண்பார்வையை இழந்தாள்.
இது குறித்து இஷா தந்தை கூறும்போது,
இஷா வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது, பெல்லேட் துப்பாக்கியின் குண்டு, அவளுடைய கண்ணில் பாய்ந்தது.இதனையடுத்து ஸ்ரீநகர் மற்றும் புதுதில்லியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாள். தன்னால் மீண்டும் பார்க்க முடியுமா? என்று கவலை அடைந்த அவளுக்கு நம்பிக்கைகளை ஊக்குவிக்க, ண்டிப்பாக பார்க்க முடியும் என்று நாங்கள் கூறி வந்தோம். ஆனால், இறுதியாக இஷாவால் பார்க்க முடியாது என்று தெரிவித்தபோது,மனம் உடைந்து போனாள்.
ஒரு மருத்துவராக வேண்டும் என்பதே அவளுடைய கனவு.எனினும் மனம் தளராமல் தனது படிப்பை தொடர்ந்த அவளுக்கு எங்கள் வீட்டின் அருகில் இருந்த ஒருவர் அவளுக்கு பயிற்சி அளிக்க முன்வந்தார். அவர், கடந்த நவம்பர் மாதம் 10ம் வகுப்பு தேர்வை எழுதினர்.இந்த தேர்வில் இஷா நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளார்.