October 6, 2016 தண்டோரா குழு
ஆயுதபடைக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா வரும் 10-ம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கவிருக்கிறார்.
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த 2000ம் ஆண்டு முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் இரோம் ஷர்மிளா. தனது போராட்ட்டத்தில் ஆதரவு குறைந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் துறந்தார்.
இரோம் ஷர்மிளா 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்ததால், அவர் மீது ‘தற்கொலை முயற்சி’ வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், அவர் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு வழக்கு நேற்று (புதன்கிழமை) இம்பால் மேற்கு நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது. விசாரணையில் அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அவர் உயிரை மாய்த்துக் கொள்ள பட்டினி கிடக்கவில்லை என்றும் தனது லட்சியத்தில் வெற்றி பெறவே உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்தியாக அவர் கூறினார். இதனை தொடர்ந்து இரோம் ஷர்மிளா மீதான கொலை முயற்சி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இரோம் ஷர்மிளா, ஆயுதபடைக்கு வழங்கபட்ட சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி வரும் அக்டோபர் 10ம் தேதி புதிய கட்சி தொடங்கவிருப்பதாகக் கூறினார்.