• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பணம் வாங்கிக் கொண்டு சீர்திருத்தப் பள்ளியில் சிறுவனைத் தப்ப வைத்த ஊழியர்களை கேமரா காட்டிக் கொடுத்தது

August 1, 2016 தண்டோரா குழு

சில நாட்களுக்கு முன்பு சீர்திருத்த பள்ளியில் பல்லிகளை தின்று விட்டதாகக் கூறி அவனைச் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனை வாசலில் தங்களை தாக்கி விட்டு சரத்குமார் தப்பிச் சென்று விட்டதாக ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

சரத்குமார் அடிக்கடி தப்பி சென்று விடுவதால் சீர்திருத்த பள்ளி ஊழியர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், காவல்துறையினர், வார்டன் மற்றும் ஊழியர்களுக்குத் தெரியாமல் சீர்திருத்தப் பள்ளியில் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.

இந்நிலையில், சரத்குமாரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, சீர்திருத்தப் பள்ளி வார்டன் மற்றும் ஊழியர்கள், ஜன்னல் கம்பியை உடைத்துத் தப்பி செல்வதற்கான வழிகளைச் செய்து காண்பிப்பது, கண்காணிப்பு கேமராவில் தெள்ளத்தெளிவாகப் பதிவாகி இருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய குயவர்பாளையத்தை சேர்ந்த வார்டன் ராஜவேலு (42), சீர்திருத்தப் பள்ளி ஊழியரான பாகூர் அருகே குடியிருப்புபாளையத்தை சேர்ந்த பலசுப்பிரமணியன் (36), பாக்கமுடையான் பேட்டையைச் சேர்ந்த சமையல்காரர் சுரேஷ் மற்றும் சீர்திருத்த பள்ளி காவலாளியான மணிவெளியை சேர்ந்த குப்புசாமி (56) ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க