August 6, 2016 தண்டோரா குழு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பசுக்களை பராமரிக்க அமைக்கப்பட்ட கோசாலையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பசுக்கள் உணவு இல்லாமல் இறந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து பா.ஜ.கவைச் சேர்ந்த முதல்வர் வசுந்தரா ராஜே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
ஜெய்ப்பூரில் உள்ள அந்தக் கோசாலையில் பசுக்களைப் பராமரிக்கவும் அவற்றிற்கு உணவளிக்கவும் நியமிக்கப்பட்ட கூலிகளுக்கும் ஜெய்ப்பூர் முனிசிபாலிட்டிக்கும் இடையே நடைபெற்று சம்பளம் தொடர்பான பிரச்சனையில் கூலிகள் ஒரு மாத காலமாக பணிக்குச் செல்லாமல் இருந்துள்ளனர்.
இதன் காரணமாக அங்கு இருந்த பசுக்களில் சுமார் 500க்கும் அதிகமானவை இறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் தற்போதைய நிலையில் அங்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பசுக்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் முதல்வர் சம்பவ இடத்திற்குச் செல்வதால் அந்த இடம் விரைவாகச் சுத்தம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்ப்பதாகத் தன்னார்வ தொடர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்