October 12, 2017 தண்டோரா குழு
ஜப்பான் நாட்டின் ஷின்மோடேக் எரிமலை சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு புகைய தொடங்கியுள்ளது.
ஜப்பான் நாட்டின் தென் பகுதியில் ஷின்மோடேக் எரிமலை அமைந்துள்ளது.இந்த எரிமலை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாக கூறப்படுகிறது.கடந்த 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, 2009, 2011 மற்றும் 2௦17 ஆகிய ஆண்டுகளில் எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த எரிமலை நேற்று மீண்டும் புகைய தொடங்கி, அதன் புகையும் சாம்பலும் வானில் சுமார் 300 மீட்டர் வரை பரவியுள்ளது. இன்னும் சில தினங்களுக்கு அந்த எரிமலை தீவிரமாக செயல்பட வாய்ப்புண்டு.இதனால் அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல கூடாது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.