November 9, 2024 தண்டோரா குழு
கோவை மாவட்டம் K.G சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரத்நிசார் (எ) நிசருதீன்(29) மற்றும் பக்ருதீன் (32) ஆகியோர்கள் கடந்த 2016-ம் ஆண்டு நவக்கரை அமிர்தா பேக்கரி பகுதியில் ரவிச்சந்திரன் (50) என்பவரை சாலையில் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக K.G. சாவடி காவல் நிலையத்தில் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெமிஷா மகன் அரத்நிசார் (எ) நிசருதீன்(29) மற்றும் பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் பக்ருதீன் (32) ஆகியோர்கள் ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை கோவை 3-ம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இவ்வழக்கின் விசாரணை இன்று (08.11.2024) முடிவு பெற்று எதிரிகளான அரத்நிசார் (எ) நிசருதீன்(29) மற்றும் பக்ருதீன் (32) ஆகியோர்களுக்கு தலா 7 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 1,000/ அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் வெங்கடேசன் (PC 873) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் பாராட்டினார்.