October 3, 2016
தண்டோரா குழு
தமிழகத்துக்குகாவிரியில்இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீரை திறக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம்அக்டோபர் 4ம் தேதிக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு அடுத்த 7 நாட்களுக்கும் தினமும் 6ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனஉத்தரவிட்டிருத்தது. இதையடுத்து, பெங்களூரில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடை பெற்றது. கூட்டத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில்,விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு 5 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளதால் நநீரை திறந்து விட முடிவு செய்துள்ளது. மேலும், நான்கு அணைகளிலும் சேர்த்து 34.13 டி.எம்.சி தண்ணீர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மத்திய மாவட்ட விவசாயம் ,பெங்களூர் குடிநீர் தேவை ஆகியவற்றோடு சேர்த்து இந்த 10000 கன நீர் தமிழகத்திற்கு திறக்கப்படும் என்று கர்நாடக சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.