• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எதிர்கட்சியாக ஆட்டத்தைத் துவங்கிய கருணாநிதி.

May 23, 2016 தண்டோரா குழு

தமிழக அரசியலில் பல தலைமுறைகளைக் கண்டவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. மிகவும் புத்திசாலி தனமாகப் பேசுவதிலும், அரசியலில் பல அவிழ்க்க முடியாத முடிச்சுகளைப் போடுவதிலும் கைதேர்ந்தவர் என அனைவராலும் பாராட்டப் பட்டுவருபவர் அவர்.

ஆனால் சமீப காலமாக அவரது கணிப்புகளும், முடிச்சுகளும் அவருக்கு எதிராகவே திரும்பி வந்ததால் வெற்றி பெறவேண்டிய வாய்ப்பைக் குறைந்த சீட்டுகள் வித்தியாசத்தில் கோட்டை விட்டார்.

குறிப்பாகக் கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸை முதலில் அழைத்து கூட்டணி வைத்துக்கொண்டது.

பின்னர் தே.மு.தி.கவுடன் கூட்டணிக்காகப் பழம் பழம் என்று அழைப்பு விடுத்து பின்னர் அந்த பலம் மக்கள் நலக் கூட்டணி பாலில் விழுந்தது என பல்வேறு முடுச்சுகள் அவருக்கே திரும்பி வந்ததால் விரக்தியில் இருந்தார்.

ஆனாலும் கடும் போட்டியைச் சந்தித்து அதில் அ.தி.மு.கவிற்கு நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு வெற்றியும் பெற்றார். அதற்குக் காரணம் அவருடன் இருந்த அனுபவஸ்தர்கள் பலரும் தற்போது அடக்கி வாசிப்பதும், பலரையும் ஸ்டாலின் ஓரம்கட்டி வைத்துள்ளதுமே தான்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள தி.மு.கவிற்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

ஆனால் அங்கிருந்து வருவதாக நேற்று மாலை வரை யாரும் பதில் கூறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரபலங்களுக்கு முன் இருக்கைகள் ஒதுக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதாகத் தகவல் கொடுத்துள்ளனர்.

ஸ்டாலின் தற்போதைய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் கூட கிடையாது என்பதால் அவரையும் அவருடன் வந்த உறுப்பினர்களையும் சட்டமன்ற உறுப்பினர்கள் அமரும் வரிசையில் அமர வைத்தனர்.

அந்த வரிசை அரங்கின் நடுவில் இருந்ததால் ஸ்டாலின் அப்செட்டில் இருந்தார். இதனால் அரங்கில் ஒரு வித இறுக்கமான சூழல் நிலவியது.

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி முதல்வர் ஜெயலலிதா திருந்தவில்லை, தேர்தலில் தோல்வியடைந்த சரத்குமார் முன்வரிசையில் உள்ளார் ஆனால் எதிர்க்கட்சியை வழிநடத்திச் செல்ல உள்ள ஸ்டாலின் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

எனவே ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை. அவரை மக்கள்தான் திருத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதில் புரோடோகால் தான் ஸ்டாலின் படி அமரவைக்கப்பட்டார் எனபது கருணாநிதிக்கும் தெரியும்.

அனால் ஜெயலலிதா முதல் நாளே நல்லபெயர் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என அ.தி.மு.கவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் பிரதான எதிர்கட்சியாக உள்ள தி.மு.க முதல்நாளே தன் கணக்கை துவங்கியதை நினைத்து அ.தி.மு.கவினர் அதிர்சியில் உள்ளனர் என்பது மட்டும் உறுதி.

மேலும் படிக்க