• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காஷ்மீரில் இன்னும் காயாத மனித நேயம்.

June 15, 2016 தண்டோரா குழு

காஷ்மீரிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் விரட்டப்பட்ட பண்டிதர்கள் மீண்டும் அவர்கள்
மண்ணிற்குத் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.அதன் படி பல பண்டிதர்கள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பியுள்ளனர்.

பாதுகாப்பை மனதில் இருத்தி அனைவரையும் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் குடியமர்த்தலாமா அல்லது அவரவர் வீட்டிலேயே குடிபுக அனுமதிக்கலாமா என்று சர்க்கார் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க 75 வருடங்களுக்கப் பிறகு இம் மக்கள் தங்களது முக்கிய மதச் சடங்கான துஷ்கார் மஹாகும்ப் பை செவ்வாயன்று கொண்டாடியுள்ளனர்.

காண்டர்பால் மாவட்டத்தில் ஜீலம் மற்றும் சிந்த் ஆகிய இரு ஆறுகளும் சங்கமமாகும் இடத்தில் புனித நீராடித் தங்களது மூதாதையர்களுக்குச் சடங்குகள் செய்வது இவர்களது வழக்கம்.

இதே இடத்தில் ஜம்மு & காஷ்மீர் பிரிவினை ஆவதற்கு முன் 1941 ம் ஆண்டு ஜூன் 4 ம் தேதி மஹாராஜா ஹரி சிங்க் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியே கடைசியாகும்.அதன்பின் 75 ஆண்டுகளுக்குப் பின் இந்த சடங்கைச் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் என்றுப் பல் வேறு இடங்களிலிருந்தும் சடங்கிற்கு வந்திருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முஸ்லீம் மக்கள் ரம்ஜான் நோன்பு விரதக் காலத்திலும் தங்களுக்குச் செய்த உதவிகளை அனைவரும் மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தனர்.தங்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து பல உதவிகளைச் செய்தனர் என்றனர்.தங்களுக்குத் தேவையான பூக்களை ஏற்பாடு செய்து தருவதிலும் சரி, ஆற்றின் சங்கமத்தின் நடுவில் உள்ள சினார் மரத்திற்குப் படகில் பலமுறை அழைத்துச் செல்வதிலும் சரி அவர்களுடைய உழைப்பு பாராட்டத்தக்கது என்று கூறினர்.

ஃவரூக் அஹமது என்பவர் பல ஹிந்து மக்களைத் தனது வீட்டில் தங்க வைத்து உபசரித்தது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

1990ம் ஆண்டு இடம் பெயர்ந்த விஜய் ரெய்னா 75 ஆண்டுகளுக்குப் பின் சங்கமத்தில் சங்கமமாவது மிகப் பெரிய சாதனை, அது மட்டுமன்றி உள்ளுர் மக்களான முஸ்லீம் இனித்தவரின் மனித நேயத்தை உணர வைத்தது அதைக் காட்டிலும் மிகப் பெரிய சாதனை என்று உரைத்துள்ளார்.

இதே இணக்கம் நீடித்து இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வாரேயானால் உலகம் நிம்மதி அடையும் என்பது ஒட்டு மொத்த மக்களின் கருத்து.

மேலும் படிக்க