• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் – பாகிஸ்தான்

October 8, 2016 தண்டோரா குழு

காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் யூரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது அதிகாலை நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தது.

எல்லைப் பகுதியில் தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக எல்லையோர மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து வருகின்றனர். இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில், இந்தியாவின் தாக்குதல்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அதில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல. காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும். காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். காஷ்மீரில் இந்தியா செய்து வரும் அட்டூழியங்களை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு பின்னர் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க