October 21, 2016 தண்டோரா குழு
கேரள மாநிலத்தில் மாணவிகள் லெகின்ஸ், ஜீன்ஸ் போன்ற நவீன உடைகளை அணிய அரசு மருத்துவக் கல்லூரி தடைவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கல்லூரி துணை முதல்வர் ஒரு சுற்றறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
அதில் வகுப்பிற்கு மாணவர்களின் வருகை சரியான சதவீதத்தில் இருக்கவேண்டும் என்றும் அதைப் பொறுத்து தான் அகமதிப்பீட்டு (இன்டர்னல்) மதிப்பெண் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதைப் போல், மாணவ, மாணவிகள் சாதாரண (ஃபார்மல்) உடை அணிந்து வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.
மேலும்,மாணவர்கள் ஃபார்மல் உடை அணிந்து, ஷூ போடவேண்டும் என்றும், பெண்கள் ஜீன்ஸ் பேன்ட் அணியக்கூடாது என்றும், சுடிதார் அல்லது புடவை தான் உடுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதைப் போல் தலைமுடியைச் சரியாகப் பின்ன வேண்டும் என்றும், லெகின்ஸ் அணியக்கூடாது, சத்தம் எழுப்பும் கொலுசுகள், வலையல்கள் பயன்படுத்தகூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவுரைப்படி தான் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டதாக மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், உடைக்கு தடைவிதிப்பது கேரளாவில் இது புதிதள்ள ஒரு வருடத்திற்கு முன்பு கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியில் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கபட்டது.
பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செய்முறை தேர்வு, மற்ற தேர்வு நேரங்களில் சுடிதார், புடவை அணிந்து வருவது வசதியாக இருக்காது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், இதற்கு மாணவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.