July 11, 2016 தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் சுமைதூக்கும் தொழிலாளி அப்பாஸ் நேற்று முன்தினம் இரவு காய்கறி மார்கெட்டில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் பொது, அதே மார்கெட்டில் பணியாற்றும் சக தொழிலாளியான மொகமத் அபூபக்கர்(23) என்பவர் தன்னை கத்தியைக்கட்டி மிரட்டி தன்னிடம் இருந்த செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வழிபறி செய்ததாக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்த காவல்துறையினர் அபூபக்கரை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர். பின்னர் அவர்மீது கொள்ளையடித்தல், அதற்காக ஆயுதங்களைக் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து கூறிய காவல்துறையினர், அபூபக்கர் மீது ஏற்கனவே குற்ற நடவடிக்கை, வழிபறி, சொத்துக்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்தனர். இவற்றில் ஈரோட்டில் 2 வழக்குகளும், மேட்டுப்பாளையத்தில் 4 வழக்குகளும் மேலும் 1 வழக்கு கரூர் காவல்நிலைய எல்லையிலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.