August 5, 2016
தண்டோரா குழு
நேற்று மாலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து புல்வாய் கரைக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அதில் படியில் பயணம் செய்த ஒருவரை ஓட்டுனர் சேகரன் திட்டி கீழே இறக்கிவிட்டு விட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை புல்வாய் கரையில் இருந்து நாங்கூர் நோக்கி வந்த பேருந்தை ஒட்டி வந்த டிரைவர் சேகரனை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த கூட்டுறவு சங்க தலைவர் ராமசுப்ரமணி ஓட்டுனரை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து மதுரை தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.