• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் டெங்கு ஒழிப்பு பணி புயல்வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – அமைச்சர் செல்லூர் ராஜு

October 12, 2017 தண்டோரா குழு

மதுரை மாநாகராட்சி சோலையழகுபுரத்தில் டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் மற்றும் மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் ஆகியோர் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு அவர்கள் இன்று(12.10.2017)துவக்கி வைத்து பேசினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் டெங்கு ஒழிப்பு பணி புயல்வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அமைச்சர்கள் அங்குள்ள அலுவர்களையும் மருத்துவர்களையும் தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் மதுரை மாநாகராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களுக்கு சுகாதாரமான, வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு தமிழக அரசு சுகாதார துறையின் மூலம் பலகோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. மதுரை மாநாகராட்சியில் நான்கு மண்டலத்திலும் சேர்ந்து 49 மருத்துவர்கள், 89 செவிலியர்கள், 36 சுகாதார பணியாளர்கள், 525 டெங்கு தடுப்பு பணியாளர்கள், 2010 ஒப்பந்த பணியாளர்கள், 15௦7 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 3517 பணியாளர்கள் மதுரை மாநாகராட்சியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருவதுடன் இந்த டெங்கு ஒழிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.இதுபோக, பொறியாளர்கள், உதவி ஆய்வாளர்கள், துறை அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் பொதுமக்களும் டெங்கு ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டெங்கு என்பது சாதாரண கட்டுப்படுத்த கூடிய நோய்தான் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. நம்முடைய கவனக்குறைவால்தான் இந்த டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

காய்ச்சல் வந்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அரசு மருத்துவமனைகளிலோ உடனடியாக செல்ல வேண்டும். காலம் தாழ்த்தி மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

மாண்புமிகு அம்மாவின் அரசு இதற்கு தேவையான அனைத்து மருந்துகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது ஆணையின்படி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நிலவேம்பு குடிநீரும் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த டெங்கு கொசு நல்ல நீரில் மட்டுமே உருவாகக்கூடியது. எனவே பொதுமக்கள் தமது வீடுகளையும் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்கள் டெங்குவை தடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் கொசு மருந்து தெளிக்க வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து உதவ வேண்டும். வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியை 3 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வதுடன், வீட்டில் பிடித்து வைத்துள்ள குடிநீரினை மூடி வைக்க வேண்டும்.

முன்னதாக அமைச்சர் அவர்கள் நிலவேம்பு கசாயத்தினை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.இறுதியில் வீடு வீடாக டெங்கு விழிப்புணர்வு பணியினை மேற்கொண்டு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். சோலையழகுபுரம் மற்றும் ஜெய்ஹிந்துபுரம் பகுதிகளில் கொசு புகை பரப்பும் இயந்திரங்கள் மூலமும், கை தெளிப்பான் மூலமும் கொசு புகை மருந்து பரப்பப்பட்டது. டெங்கு குறித்து சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. டெங்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர், நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன், உதவி ஆணையர் கௌசலாம்பிகை, உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சித்திரவேல், முகமது ரசூல், செயற்பொறியாளர் சேகர், பூச்சியல் வல்லுனர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வகுமார்,வீரன், உட்பட மாநாகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க