August 2, 2016 தண்டோரா குழு
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் அருகே இளம் ஜோடி ஒன்று அந்தரத்தில் தொங்கியபடி வினோதமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
திருமண நிகழ்வு என்பது இருவீட்டாரும் இணைந்து இரு மனங்களை ஒன்று சேர்க்கும் நிகழ்வாகும். அந்நிகழ்வை தங்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்க ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை புதிய கோணத்தில் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் கணித அறிவியல் பொறியாளர் ஜெய்தீப் ஜாதவ்(33), இவருக்கும் ரேஷ்மா பாட்டீல்(26) என்பவருக்கும் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திருமணத்தை வினோத முறையில் நடத்தியுள்ளனர்.
கோலாப்பூர் அருகே 70கி.மீ தொலைவில் உள்ள ஜாக்ஹாணி மலைப் பகுதியில் சுமார் 250 அடி உயரத்தில் 350 அடி நீள 3 வரி ரோப்வேயில் தொங்கியபடி திருமணம் செய்துள்ளனர். இருவரும் எதிரெதிரே இருந்த ரோப்வேயிலும், மந்திரம் சொல்ல வந்த புரோகிதர் ஒரு ரோப்வேயிலும் தொங்கியபடி மாங்கல்ய தாரம் செய்து கொண்டனர்.
இந்த வினோத திருமணத்தை தம்பதிகளின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் கண்டனர்.
தனது நண்பர் கொடுத்த யோசனையின் படி கடந்த ஜூலை 31ஆம் தேதி சுமார் 15 நிமிடம் அந்தரத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டதாக எங்களது திருமணம் நடைபெற்றது என்றும் இதற்கு ரேஷ்மா குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்ததாகவும் ஜெய்தீப் கூறியுள்ளார்.
இது குறித்து ரேஷ்மா கூறும்போது,
ஆழமான பள்ளத்தாக்கில் தொங்கியபோது, விழுந்துவிடுவேனோ என்ற பயம் எனக்குள் இருந்தது. இருப்பினும் மலையைச் சுற்றி இருந்த மூடுபனி சற்று ஆறுதல் அளித்தது. சுமார் 15 நிமிட நிகழ்வில் எனது வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியை அனுபவித்தேன் எனக் கூறியுள்ளார்.